இப்பெட்டியின் மூலம் விவசாயிகளுக்கு அவர்கள் தோட்டத்திற்க்கே சென்று விதை நிலக்கடலை அடித்து சுத்தம் செய்து கொடுக்கலாம். இதனால் விதைப் பருப்பை அடித்த உடனே தோட்டத்தில் பயிர் செய்யலாம். இதன் மூலம் நிலக்கடலை செடி தரமான ஊக்கத்துடன் உடனே முளைத்து விடும். மேலும் விவசாயிகளுக்கு நேரமும், காலமும் மிச்சமாவதுடன் வேலை பழுவும் குறைகிறது. பணமும் விரையமாவது தவிர்க்கபடுகிறது. வியாபாரிகளுக்கும் இந்த இயந்திரம் ஏற்றதாக இருக்கும். இந்த இயந்திரத்தை வியாபாரிகள் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளிடம் நிலக்கடலையை கொள்முதல் செய்து அங்கேயே அடித்து சுத்தம் செய்து கொள்ளலாம். இதனால் அதிக முதலீடு செய்து குடோன் போன்றவற்றை கட்டவேண்டியதில்லை. இந்த இயந்திரத்தின் மூலம் ஆமணக்கு முத்தை அடித்து பிரிக்கலாம்.
இதை இயக்குவதற்கு டிராக்டரின் PTO சாப்டின் மூலமும் இயக்கிக் கொள்ளலாம். அல்லது ஆயில் இன்ஜினையும் பயன்படுதிக்கொள்ளல்லாம்.