பலதானியங்களை அடித்து பிரித்தெடுக்கும் நவீன இயந்திரம்(அவுட்லெட் கன்வேயர் மாடல்)
பலதானியங்களை அடித்து பிரித்தெடுக்கும் நவீன இயந்திரம்(அவுட்லெட் கன்வேயர் மாடல்)
இயந்திரத்தின் எந்த பாகத்தையும் மாற்றாமல் அனைத்து விவசாய தானியங்களையும், அதாவது நெல், மக்காசோளம், சூரியகாந்தி, அவரை, துவரை, உளுந்து, கொத்தமல்லி, பாசிப்பயிறு போன்ற தானியங்களை அடித்து பிரிக்கும் ஒரே இயந்திரம் எங்கள் இயந்திரம்.
சிறப்பம்சங்கள்
நெல்மணிகள், தோல்கள் (உம்மி) உரிக்காமல் பழைய கைக்குத்தல் முறையில் வருவது போல சுத்தமாக வருகிறது. இதனால் விதை நெல்லிற்க்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
மக்காசோளம், சூரியகாந்தி, சோயாபீன்ஸ், கொத்தமல்லி, உளுந்து, கொள்ளு,அவரை,துவரை,வெள்ளைசோளம், பட்டாணிக்கடலை(சுண்டல்)(நிபந்தனைக்குட்பட்டது) போன்ற தானியங்களையும் நல்லமுறையில் அடித்து சுத்தம் செய்யலாம்.
பலதானியங்களை அடித்து பிரித்தெடுக்கும் நவீன இயந்திரத்தின் சிறப்பம்சங்கள்
1 மணி நேரத்திற்கு ஒரு ஏக்கர் நெற்கதிரை அடிக்கலாம்.
மக்காசோளத்தின் சருகு உரிக்காமலேயே அடித்து பிரிக்கலாம்.(மணிக்கு 60 மூட்டை முதல் 80 மூட்டை வரை)
மக்காசோளம் தோகை, கட்டை, சோளம் தனித்தனியாக வரைக்கூடியது.
அணைத்து டிரேக்டரின் PTO சாப்டிலும் இணைத்து இயந்திரத்தை இயக்கலாம்.
வேலை செய்யும் ஆட்களுக்கு விபத்துகள் ஏற்படா வண்ணம் எங்கள் இயந்திரம் வடிவமைக்கப்படுள்ளது.
வேர்கடலை செடியிலிருந்து கடலைக்காய் தனியாக பிரித்து எடுக்கலாம்.*(நிபந்தனைக்குட்பட்டது).